தேங்காய் மிளகு நண்டு... Non veg people க்கு செம்ம treat -ஆ இருக்கும்...!
Coconut pepper crab would be a great treat for non veg people
தேங்காய் மிளகு நண்டு
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
நண்டு - கால் கிலோ
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
சோம்பு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை :
முதலில்,நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும். சுவையான தேங்காய் மிளகு நண்டு தயார்.
English Summary
Coconut pepper crab would be a great treat for non veg people