தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகம் வலிப்பதற்கான காரணங்கள்.. தாய்ப்பால் கட்டில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்.!!
Breast feeding milk pain causes and solution
இளம்பெண்கள் முதல் பிரசவத்தை சந்திக்கும் சமயத்தில் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில், தாய்ப்பால் கட்டு ஏற்பட்டு மார்பு பகுதியில் அதிகளவு வலி ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் தாய்மார்கள் பால் கொடுப்பது தொடர்பான விபரத்தை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தாய்ப்பால் கொடுத்தால் பிரச்சனை கிடையாது. தாய்ப்பால் கட்டிவிடும் பட்சத்தில் காய்ச்சல், மார்பில் வலி மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத அளவிற்கு வலி, தாய்ப்பால் வராமல் அடைத்துக்கொள்வது, மார்பு பகுதி சிவந்து தடித்து இருப்பது போன்ற பிரச்சனை ஏற்படும். தாய்ப்பால் கட்டியிருக்கும் பட்சத்தில் குணமாக்க குறித்த ஆலோசனைகள் குறித்து இனி காண்போம்.
மார்பில் அதிகளவு வலி அல்லது வீக்கம் இருக்கும் பட்சத்தில், சுடுநீரை கொண்டு ஒத்தனம் கொடுக்கலாம். இதனால் மார்பு வலி குறையும். இதமான சூட்டில் மார்பு பகுதியில் ஒத்தனம் கொடுக்கும் பட்சத்தில் வலி குறையும். மெல்லிய காட்டன் துணியை கொண்டு ஒத்தனம் கொடுத்தால், மார்பு வலி குறையும். இதனால் பால் கட்டியுள்ளது தளர்ந்து பால் வெளியேறும். வெந்நீரை போலவே ஐஸ்கட்டிகளை கொண்டும் ஒத்தனம் கொடுக்கலாம். இதனால் மார்பு பகுதியானது இருக்கமாகும் நேரத்தில் பாலின் கட்டு தளர்ந்து பால் விரைவாக வெளியேற உதவி செய்யும்.

மார்பில் பால்கட்டு இருக்கும் நேரத்தில், மார்பு பகுதியில் கைகளை வைக்க இயலாத அளவிற்கு வலியானது இருக்கும். குறைந்தளவு வலி இருக்கும் சமயத்திலேயே மசாஜ் செய்வது நல்லது. வலி அதிகமாகும் பட்சத்தில் மசாஜ் செய்வது அதிக வலியை ஏற்படுத்துவது போல உணர்த்தும். உள்ளங்கையை வைத்து வட்டவடிவில் மசாஜ் செய்யலாம். மிதமாக 10 நிமிடம் மசாஜ் செய்வது, மார்பக வலியை குறைத்து, பால்கட்டும் பிரச்சனையை குறைக்க துவங்கும். உறங்கும் நேரத்தில் மார்பகம் தரையில் அழுத்தும் வண்ணம் படுத்து உறங்க கூடாது. ஒருபுறமாக படுத்து உறங்க வேண்டும். இதனைப்போன்று மேலே வானை நோக்கியவரும் படுக்க கூடாது. இதனால் மார்பகம் கனமாக மாறும்.

வானை நோக்கி படுத்து உறங்கி காலை எழுந்தாள் மார்பக வலி அதிகரிக்கும். குழந்தையாலும் பாலினை குடிக்க இயலாது. இதனால் உறங்கும் போது ஒரு புறமாக படுத்து உறங்குவது நல்லது. தாய்ப்பால்கட்டு இருந்தாலும், இல்லை என்றாலும் பால் கொடுக்கும் சமயத்தில் ஒருக்களித்து படுத்து இருக்க கூடாது. இதனால் பால் வேகமாக குழந்தைக்கு வழங்கப்பட்டு, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நமது முன்னோர்கள் தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து மார்பில் இட்டு வந்துள்ளனர். ஆனால் மல்லிப்பூ தாய்ப்பால் சுரப்பை கட்டுக்குள் வைக்கும் என்பதால், குழந்தைக்கு பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மல்லிகைபூவிற்கு பதிலாக பச்சைப்பயறு அல்லது கடலைப்பருப்பு நன்கு அரைத்து தண்ணீரில் சேர்த்து குழைத்து மார்பில் போட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். பாலும் எளிதாக வெளியேறும்.

தாய்ப்பால் அதிகளவு சுரக்க வேண்டும் என்று எண்ணியும், உடல் பலம் பெறுவதற்காகவும் தாய்மார்கள் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வார்கள். தாய்ப்பால் கட்டு பிரச்சனை இருக்கும் போது உணவை குறைக்க வேண்டும். உணவை தாய்ப்பால் கட்டு பிரச்சனை இருக்கும் போது குறைக்கவில்லை என்றால் பால் சுரப்பு அதிகரித்து, மார்பில் வலி அதிகரிக்கும். தற்போதுள்ள இளம் தாய்மார்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு இல்லை என்று கூறுகின்ட்நரர். மேலும், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதத்திற்கு தாய்ப்பால் கட்டு ஏற்படலாம். மார்பில் பால் கட்டியிருப்பதை அறியாமல் இருக்கும் தாய்மார்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் வலி என்று தவறாக எண்ணுவதும் உண்டு.
Tamil online news Today News in Tamil
English Summary
Breast feeding milk pain causes and solution