கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு; தனி ஒருவராக ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்; நடந்தது என்ன..?
TVK Candidate Sathyakumar Canvasses for Votes All Alone
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 04-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு, முடுவுகளும் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தலுக்காக ஆளும் திமுக மற்றும் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி , தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 05 முனை போட்டி நிலவும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார் போட்டியிடுகிறார். இன்று திருத்தணி நகரம் முழுவதும் அவர் தனி ஒருவராக வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தன்னந்தனியாக சாலையில் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
சத்திய குமார் திருத்தணியில் உள்ள இளைஞர்களை கஞ்சா பார்ட்டிகள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதாகவும், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சத்திய குமாரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் எனவும், தொடர்ந்து இவர் வேட்பாளராக இருந்தால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், அவர் தனியாக ஓட்டு சேகரித்ததாக கூறப்படுகிறது.
English Summary
TVK Candidate Sathyakumar Canvasses for Votes All Alone