'சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க மாட்டேன்'; செல்வப்பெருந்தகை அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வருகிறார். இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு பின் நேற்று செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், 85% வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள். எனவே வேட்பாளர் பட்டியல் வெளிவரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் மீதம் இருக்கக்கூடிய 15 சதவீதம் வேட்பாளர்கள் உடைய பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் நடவடிக்கையில் ஒரு சிக்கலும் இல்லை. ராகுல் காந்தி முதல்வருடன் பேசி இருக்கலாம். அதன் அடிப்படையில் முதல்வர் ராகுல் காந்தி வேட்பாளர்களை அறிவிப்பார் என்று முதல்வர் கூறி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க மாட்டேன் என செல்வப்பெருந்தகை தற்போது தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ராகுல்காந்தியிடம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selvaperunthagai announces that he will no longer serve as the President of the Tamil Nadu Congress Committee following the Assembly elections


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->