பஞ்சாப்பிற்கு 210 டார்கெட்டை நிர்ணயித்துள்ள சிஎஸ்கே; சேப்பாக்கத்தில் விசிலுக்கான தடை நீக்கம்; உற்சாகத்தில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளதால் சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு விசில் மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதிப்பப்பட்டது. இதனால் விசில் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் விசில் அடித்து சென்னை – பஞ்சாப் போட்டியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தொடரின்போது விசிலை பயன்படுத்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலை தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் விசிலுக்கு மைதான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ரசிகர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட மஞ்சள் நிற விசிலை உற்சாகத்துடன் அடித்து ஆரவாரம் எழுப்பி வருகிறார் தற்போது வரை சென்னை அணி முதல் இன்னிக்ஸ் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு .209 ரன்களை எடுத்துள்ளது. 

அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் 07 ரன்களிலும், ருதுராஜ் 28 ரங்களிலும் ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரே நிதானமாக ஆடி 43 பந்துகளில், 73 ரன்களை குவித்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மா 01 ரன்னிலும், சப்ராஸ்கான் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பிரசாந்த் வீர் 06 ரன்களிலும், சிவம் தூபே 45 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CSK sets a target of 210 for Punjab and the ban on whistling at Chepauk has been lifted


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->