பப்பாளியை காலை உணவாக எடுத்து கொண்டால் இத்தனை நன்மைகளா?
Benefits of taking papaya as a breakfast
பப்பாளியில் உடலுக்கு வலுசேர்க்கும் எண்ணெற்ற ஊட்ட்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளன. காலை உணவாக பப்பாளியை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
ஒரு கப் பப்பாளியை காலையில் சாப்பிட்டால் ஜீரண சக்தி மேம்பட்டு நச்சு நீக்கியாக செயல்படும். மேலும், வயிறு எரிச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்சனகளுக்கு தீர்வளிக்கும்.

பப்பாளியில் வைட்டமின் A மற்றும் C அதிகம் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். இதில், உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
பப்பாளியில் உள்ள விட்டமின் E கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சரும அழகை பராமரிக்கவும் உதவும். பப்பாளியை காலையில் சாப்பிட்டு வர நீண்ட நேரம் பசி எடுக்காது, இதனால், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பப்பாளியை சாப்பிட்டு வரலாம்.
English Summary
Benefits of taking papaya as a breakfast