காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஏன் காளான் சாப்பிட கூடாது?..! - Seithipunal
Seithipunal


உடலுக்கு நன்மை சேர்க்கும் பல உணவுகளை நாம் சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில், காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஏன் காளான் சாப்பிட கூடாது என இன்று தெரிந்துகொள்ளலாம்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்ததுள்ளது. ஆறாத புண்களைக் குணப்படுத்தும். மேலும் காளானில் வைட்டமின் - ஏ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் பி, டி, இ ஆகியவை உள்ளன.

காளான் எரிட்டினைன் என்னும் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக்குகிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. 

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலம் அடைந்து நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

காளான் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal

தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் சீராகும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் போன்றவை குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலுட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits and Health tips to Eat Kalan or Mushroom Why Breast Feed Woman to Avoid Mushroom


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->