சிவப்பணுக்களை அதிகரிக்கும் பீட்ரூட்டில் சுவையான அல்வா எப்படி செய்வது..! - Seithipunal
Seithipunal


இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் அல்வாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையாக செய்யலாம். பீட்ரூட் அல்வா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

துருவிய பீட்ரூட் - 1 கப்

பால் - 1 1/2 கப்
முந்திரி - 5
நெய் - 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை கொட்டி கிளறவும். பச்சை வாசனை போனதும் அதில் பால் சேர்த்து ஏலக்காய் தூள், முந்திரி, நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும்.  அல்வா பதம் வரும் வரை கிண்டவும்.

*பீட்ரூட் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி குளிர்ச்சியை தரும். கண்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beetroot Halwa Recipe


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->