வாழைப்பழத்தில் பணியாரம்... ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Banana sweet paniyaram recipe in tamil
சுவையான ''வாழைப்பழ பணியாரம்'' எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம்
சுக்கு
ஏலக்காய்
நாட்டு சர்க்கரை
கோதுமை மாவு
அரிசி மாவு
கருப்பு எள்ளு
தேங்காய்
நெய்
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பழுத்த வாழைப்பழங்களை தோல் உரித்து போட்டுக் கொள்ளவும். அதில் சுக்கு, ஏலக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு ஏறியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கலவையில் தேங்காய் மற்றும் கருப்பு எள்ளு சேர்த்து கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் பணியாளர்களை அடுப்பில் வைத்து சூனியம் ஏதும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.
English Summary
Banana sweet paniyaram recipe in tamil