5 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை வைத்து அசத்தல் ஓவியம்.! - Seithipunal
Seithipunal


5 மில்லியன் புள்ளிகளில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளவரின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கொரோனா காலகட்டத்தில் வீடுகளில் இருந்து வரும் பலரும் தங்களின் தனித்தன்மையை புரிந்துகொண்டு, அதனை வைத்து பெரும் சாதனை செய்து வருகின்றனர். சிறுவயதில் தங்களால் இயலாமல் போன கொண்டாட்டங்களை சிலர் மீண்டும் நினைத்துப்பார்த்து செய்து வந்தாலும், பல இளம் சிறார்கள் இன்றுள்ள காலகட்டத்திற்கு ஏற்றாற்போல தங்களை உயர்த்தி வருகின்றனர். 

குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையின் இன்றைய தேடல்கள் பெரும்பாலும் இணையவழியில் இருந்தாலும், அதனை வைத்து பலவற்றை அறிந்து வருகின்றனர். ஆன்மிகம், வரலாறு, எதிர்கால சிந்தனைகள் என தங்களின் தேடல்களை புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்று சாதனை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கலிங்க மற்றும் ஹொய்சாலா கட்டிடக்கலைகளை பார்த்து வியந்த ஒருவர், அதனை வைத்து சாதனை செய்துள்ளார். மார்வி உச்சிடா (Marvy Uchida) என்ற பேனாவை கொண்டு, சுமார் 504 மணிநேரத்தில் 5 மில்லியன் புள்ளிகளை வைத்து ஓவியம் வரைந்து சாதனை செய்துள்ளார். 

யூடியூபில் டூடுல் டேனி (Doodle Dany) என்ற பக்கத்தை உருவாக்கிய இளைஞர் தனுஷ், இந்திய கலாச்சாரங்களில் உள்ள கலிங்க மற்றும் ஹொய்சாலா கட்டிடக்கலைகளை பார்த்து அதன் மூலமாக 5 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை வைத்து ஓவியம் வரைந்துள்ளார். 

முதலில் பென்சிலால் ஓவியத்தை வரைந்த நிலையில், மார்வி உச்சிடா பேனா மூலமாக 0.05 மி.மீ. அளவுள்ள புள்ளிகளை கொண்டு அதற்கான அழகை மெருகேற்றுகிறார். இந்த ஓவியத்தில் முழுவதுமாக புள்ளிகளை வைத்து வரைந்து முடிக்க சுமார் 504 மணிநேரம் (24 நாட்கள் ) ஆகியது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

நீங்களுக்கு அந்த வீடியோவை கீழுள்ள பதிவில் கண்டு மகிழலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTube Doodle Dany Dhanush Creates ART USING 5 MILLION DOTS


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->