காதலியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


காதலியை கொலை செய்து காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு. இவர் அதே பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். அவ்வபோது இருவருக்கும் இடையே  தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை இவர்கள் இருவரும் அருகிலுள்ள சுற்றுலா இடமான காவேரி நிசர்கதாமா பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சித்தராஜூ சுமித்ராவை கொலை செய்து அவரின் உடலை புதைத்து விட்டு அங்கிருந்த மரத்தில் தற்கொலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காட்டு பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed his lover and Committed Suicide


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal