மோடி குறித்து அவதூறு கருத்து - வீடியோவால் சிக்கிய வாலிபர்.!!
youth arrested for vedio against prime minister modi
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது பாகிஸ்தான் ஏன் பிரதமர் மோடி வீட்டின் மீது குண்டு வீசவில்லை? இந்தியாவில் அமைதி நிலவியபோது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியது அவர்தான்.

அவர் வீட்டின் மீது பாகிஸ்தான் குண்டு வீசவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த நவாஜ் என்பதும், இவர் இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் விரக்தியடைந்து இந்த வீடியோவை பதிவிட்டதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for vedio against prime minister modi