குறைந்த விலையில் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் பார்கவஸ்திரா: பரிசோதனை வெற்றி..!
Low cost anti drone rocket Bargavastra successfully tested
குறைந்த விலையில் டிரோன்களை தாக்கி அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு இன்று சோதனை செய்யப்பட்டது. குறித்த எதிர் டிரோன் அமைப்பிற்கு பார்கவஸ்திரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் பார்கவஸ்திரா ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் இந்தியா மீது குறைந்த விலையிலான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை அழிக்க எஸ். 400 போன்ற விலை உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா பயன்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவிற்கு தற்போது டிரோன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பார்கவஸ்திரா என்கிற அமைப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் டிரோன்களை அழிப்பதற்கான செலவை வெகுவாகக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.
குறைந்த செலவில் (SDAL நிறுவனம்) தயாரித்த பார்கவஸ்திரா ராக்கெட் வானில் பறந்த டிரோனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த டிரோன் அமைப்பானது 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிரோன்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Low cost anti drone rocket Bargavastra successfully tested