ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் - மத்திய அரசு அறிவிப்பு.!!
third rocket launch pad in sriharikotta
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இரு நாட்டின் அரசும் உறுதி செய்தன.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ரூ.3,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
third rocket launch pad in sriharikotta