உக்ரைன் - ரஷ்யா இடையே நாளை பேச்சுவார்த்தை: புதின் பங்கேற்க மாட்டாரா..?
Talks between Ukraine and Russia tomorrow Will Putin not participate
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் மூன்றறை வருடங்களாக அதாவது ஆயிரத்து 175 நாளாக இன்னும் நீடித்து வருகிறது. குறித்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தும், அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ஆனால், தற்போது அங்கு போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 08-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 03 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 15-ஆம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தையில் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெலன்ஸ்கி துருக்கி செல்வது உறுதியாகியுள்ள நிலையில் புதின் அங்கு செல்வது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் துருக்கி சென்றால் நானும் துருக்கிக்கு சென்று அவரை சந்திப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Talks between Ukraine and Russia tomorrow Will Putin not participate