சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட குட்கா - கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!
kutka seized in krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் காவல் நிலைய போலீஸார் இன்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது.
போலீஸார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார், வாகனத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதைப்பார்த்த வாகன ஓட்டுநர் கந்தி குப்பத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

பின்னர் போலீஸார் வாகனத்தை சோதனை செய்ததில், பாக்கு மட்டைக்குள் மறைத்து வைத்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், குட்கா பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், தப்பியோடிய வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kutka seized in krishnagiri