அடுத்த ஐ .பி.எல். போட்டியில் சென்னை அணியில் மீண்டும் இணையும் பேபி ஏ.பி.டி..?
Will Dewald Brevis rejoin the Chennai team in the next IPL match
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிகமாக அமலில் உள்ளது. இதனால் வருகிற 17-ந்தேதி மீண்டும் ஐ.பி.எல். போட்டி தொடங்கும் என அறிவித்துள்ளது.
13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 04 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறவுள்ளது.தொடர்ந்து, மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 01-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 02-வது தகுதி சுற்றும், ஜூன் 03-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் நிறுத்தப்பட்டதால் நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் மீண்டும் இணைய உள்ளனர். இந்த நிலையில் சென்னை வீரர் டேவால்ட் பிரேவிஸ் தனது எக்ஸ் தள பதிவில் 'உங்களை விரைவில் சந்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார். சென்னை அணி அடுத்த போட்டியில் வரும் 20-ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது . இதில் பிரேவிஸ் கலந்துகொள்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.
English Summary
Will Dewald Brevis rejoin the Chennai team in the next IPL match