நடப்பு ஐபிஎல் போட்டியில் புதிய வீரர்களை இணைக்க அனுமதி; ஆனாலும் ஒரு கண்டிஷன்..? - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான  ஐ.பி.எல். போட்டியின்  18-வது  சீசன் லீக் போட்டிகள் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இரு நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்ததை அடுத்து,  அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. நடப்பு போட்டிகளில் 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 04 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

புதிதாக மாற்றப்பட்ட அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இநடைபெறவுள்ளது. மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 01-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 02-வது தகுதி சுற்றும், ஜூன் 03-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையின் படி,09 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது.

இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கரங்களுக்கக ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால், தற்போது இணைக்கப்படும் புதிய வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். 2026 ஐபிஎல் தொடரில் விளையாட தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New players allowed to add in the current IPL


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->