உ.பி-இல் வரதட்சணை கொடுமை: வாயில் ஆசிட் ஊற்றி குடிக்க வைத்து இளம்பெண் கொடூர கொலை: கணவன் உள்பட குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை..!
Young woman brutally murdered in UP after being forced to drink acid over dowry violence
உ.பி-இல் இளம் பெண்ணை ஒருவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வாயில் ஆசிட் ஊற்றி குடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலை செய்த சம்பவத்தில் கணவன், மாமியார், மாமனாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்தவர் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியை சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டில் குல் பைசா வாஸ்த்து வந்துள்ளார். நாளைடைவில், வரதட்சணை கேட்டு கணவன் பர்வேஷும் அவரது குடும்பத்தினரும் குல் பைசாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மீண்டும் கூடுதல் வரதட்சணை கேட்டு, பர்வேஷ், அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து குல் பைசாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன், குல் பைசாவின் வாயில் ஆசிட் ஊற்றி, அதை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆசிட் குடித்ததால் குல் பைசாவின் வாய், தொண்டை, குடல் பகுதிகள் வெந்து, அலறி துடித்துள்ளார்.
இதை பார்த்தது ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 17 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young woman brutally murdered in UP after being forced to drink acid over dowry violence