மலையேற்றம் சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர்.. 2 நாட்களாக உணவு தண்ணீர் இன்றி தவிப்பு..! அதிர்ச்சி தரும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே உள்ள செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு. நேற்று முன்தினம் இவர் தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேருடன் அங்குள்ள செராடு மலைக்கு மலையேற்றம் சென்றார். அந்த மலை மிகவும் செங்குத்தாக உள்ளதால், யாரும் அங்கு அதிகமாக செல்வது கிடையாது. 

ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததால், பாதி வழியில் இரண்டு நண்பர்களும் திரும்பி விட்டனர். பாபு தொடர்ந்து சிறிது தூரம் ஏறிய பிறகு, அவரால் ஏற முடியவில்லை. அதன் பிறகு கீழே இறங்க முடிவு செய்தார். அப்போது கால் வழுக்கி கீழே விழுந்தபோது பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், பாறை இடுக்கில் இருந்து ஏறமுடியவில்லை. 

இதையடுத்து, செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்களால் பாபு இருக்கும் இடத்திற்கு செல்ல செல்ல முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் படையினரின் ஹெலிகாப்டரில் சென்று மீட்க முயன்றனர். அவர் சிக்கி இந்த பாறையின் அருகில் ஹெலிகாப்டரால் செல்ல முடியவில்லை. பாலக்கோடு மாவட்ட ஆட்சியர் மியூன்மயி ஜோஷி, எஸ்பி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்க நடவடிக்கை எடுத்தனர். 

கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவரை மீட்பதற்காக ராணுவ உதவியை கோரினார். கோவையில் உள்ள ராணுவப் பொறியாளர் பிரிவை சார்ந்த வீரர்களும், பெங்களூரிலிருந்து கமாண்டோ வீரர்களும் விரைந்தனர். இன்று காலை அவர்கள் வாலிபரை மீட்கும் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மலை இடுக்கில் சிக்கி உள்ளதால், அவர் உடல்நிலை மோசமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man stranded kerala hill daunting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->