உற்சாகமாக நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து பலி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இளைஞர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் வன்சாரா என்பவர் பாரியாவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். 

அப்போது சற்று உடல் சோர்வடைந்த ரமேஷ் வன்சாரா திடீரென மயங்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ரமேஷ் வன்சாராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man death in while dancing in function


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->