உலக பசுமை நகர விருதுக்கு தேர்வான ஒரே இந்திய நகரம் ..!
world green city award goes to telungala state
இந்த வருடம் சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'உலக பசுமை நகர விருதுகள் 2022' என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள ஜெஜூவில் நேற்று நடைபெற்ற தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விருதுகள் விழாவில், ஐதராபாத் ஆறு பிரிவுகளிலும் 'உலக பசுமை விருதை' வென்றது.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் என்றால் தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத் மட்டுமே. ஐதராபாத், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமையை மேம்படுத்துவதற்காக மதிப்புமிக்க ஏஐபிஹச் குளோபல் 'வேர்ல்ட் கிரீன் சிட்டி விருதுகள் பெற்றுள்ளது.
இதுகுறித்து, தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் தெரிவித்ததாவது,
"ஐதராபாத் மாநகரத்திற்கு புகழ்பெற்ற "சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கம்" விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இந்த சர்வதேச விருதுகள் தெலுங்கானா மற்றும் இந்திய நாட்டின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச விருதுகளுக்கு இந்தியாவின் ஒரே நகரமாக ஐதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரியது" என்று மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தெலுங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், இந்த சாதனைக்காக ஐதராபாத் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சிறப்பு தலைமைச் செயலாளர் அரவிந்த் குமாரை பாராட்டினார்.
English Summary
world green city award goes to telungala state