உலகத்திலேயே முதலிடம் பிடித்த சாப்பாடா... அப்படி அதுல என்னதாப்பா இருக்கு?
world first food in hydrabad haleem
இதுவரை இந்திய உணவு வகைகளில் புகழ்பெற்ற உணவுகளான ரசகுல்லா, பிகானரி புஜியா உள்ளிட்ட 17 வகையான உணவுகளில் அதிக புகழ்பெற்ற இந்திய உணவாக ஹைதராபாத் மாநிலத்தின் ‘ஹலீம்’ வென்றுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் உணவு பிரிவில் அதிக புகழ்பெற்ற இந்திய உணவு என்ற விருது ஹைதராபாத் மாநிலத்தின் பிரபலமான உணவான ஹலீமுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை, இந்தியா மற்றும் அதைச் சுற்றி உள்ள நாடுகளில் இருக்கும் மக்களிடையே இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஹைதராபாத் மாநிலத்தின் உணவான ஹலீம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.
இந்த ஹலீம் உணவு ரம்ஜான் நோன்பு காலத்தில் மிகவும் விரும்பி உண்ணும் உணவாகும். ஆட்டிறைச்சியை நைசாக அரைத்து, அதில், கோதுமை மாவு சேர்த்து கலந்து அதில் சில பருப்பு வகைகளும், கார வகைகளும் சேர்ந்து ஒரு தனி சுவையுடன் வழங்கப்படும் உணவுதான் ஹலீம் ஆகும்.
English Summary
world first food in hydrabad haleem