தோழியுடன் ஒரே அறையில் இருந்த கள்ளக்காதலன் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் வசித்து வந்தவர் யசோதா. திருமணமான இவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் யசோதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருக்கும்,  பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இரண்டு பேரும் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இதையடுத்து யசோதா தனது தோழியான பிரியங்கா என்பவரை விஸ்வநாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து பிரியங்காவும், விஸ்வநாத்தும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி, யசோதாவுக்கு தெரியாமல் பேசி வந்தனர். காலப்போக்கில் இவர்களுக்கு இடையேவும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனால் விஸ்வநாத், யசோதாவிடம் சரிவர பேசாமல் இருந்ததால் சந்தேகமடைந்த யசோதா தனது தோழி பிரியங்கா மற்றும் விஸ்வநாத்தின் நடவடிக்கைகளை கவனித்து பிரியங்காவின் நட்பை கைவிட கூறி விஸ்வநாத்திடம் சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் விஸ்வநாத்தும், பிரியங்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இதையறிந்த யசோதா அந்த ஓட்டலுக்கு சென்று அவர்கள் இருவரிடமும் பயங்கரமாக சண்டையிட்டு இருவரையும் விடுதியில் வைத்து தாக்கியுள்ளார். பின்னர் யசோதா அருகில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women sucide for boy friend stay in hotel with girl friend in karnataga banglore


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->