பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக தெரிகிறார்கள் - பாபா ராம்தேவ்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் ஆடை அணிய விட்டாலும் என் பார்வையில் அழகாக தெரிகிறார்கள் என பாபா ராம்தேவ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம் மற்றும்  மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பதஞ்சலி நிறுவன தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமை தாங்கினார். மேலும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா பட்னாவிஸ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், 'பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வாரிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை எதுக்கும் அணியவில்லை என்றாலும் என்னுடைய பார்வையில் அவர்கள் அழகாக தெரிகிறார்கள்' என கூறியுள்ளார்.

இதில், 'பெண்கள் ஆடை எதுவும் அணியாமலும் என் பார்வையில் அவர்கள் அழகாக தெரிகிறார்கள்' என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women don't wear clothes they look beautiful in my eyes Baba Ramdev


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->