சாலை போடும் ஊழியர்களை மிரட்டி எந்திரங்களுக்குத் தீ வைத்த பெண் நக்சலைட்டுகள் - போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் மாவட்டம் கம்டேடா கிராமத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் சாலை போடும் பணி நடைபெற்றது.

அப்போது,  சீருடை அணிந்த பெண் நக்சலைட்டுகள் சிலர், ஆயுதத்துடன் அங்கு வந்து, சாலை போடும் பணியை நிறுத்துமாறு ஊழியர்களை மிரட்டியுள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். 

மேலும், சாலை போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு எர்த் மூவர்ஸ் எந்திரங்கள், ஒரு கலவை எந்திரம் உள்ளிட்டவற்றிற்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு சம்பவம் தொடர்பாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சாலை போடுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தீவைத்த பெண் நக்சலைட்டுகளை பிடிப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman naxalites fire to road construction used machinery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->