ஐதராபாத் || காதல் தோல்வியால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!
Woman Committed Suicide Due To love failure
காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஐதராபாத் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஷாபானா. இவர் அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணிய மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஷாபானா காதல் தோல்வியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Committed Suicide Due To love failure