விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம்.. மத்திய அரசு தகவல்.!
Without Visa Foreign Countries Travel By Indian Peoples
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது தொடங்கி, இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நிறைவு பெற்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், விவசாய மசோதா பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவுகள் மற்றும் மொரிசியஸ், நேபாளம், ஹாங்காங் போன்ற 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதி அளிப்பதற்கான தகவலை மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஈரான், இந்தோனேஷியா உள்ளிட்ட 43 நாடுகளின் விமான நிலைய விசாக்கள் மற்றும் இலங்கை, நியூசிலாந்து, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும் 36 நாட்களில் இ-விசாக்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடுகள் மற்றும் விமான நிலைய விசாக்கள் வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Without Visa Foreign Countries Travel By Indian Peoples