6G ஸ்மார்ட் போன்கள் எப்போது சந்தைக்கு வரும்..? சூப்பர் அப்டேட்; மிஸ் பண்ணிடாதீங்க..!
When will 6G smartphones hit the market
உலகில் மில்லியன் கணக்கான டிவைஸ்கள் 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் புதிய நெட்வொர்க்கை ஏற்றுக்கொள்ளும் வேகம் என்பது விரைவாகவே உள்ளது.
இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் 6G எனப்படும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் டெக்னாலஜி வரவுள்ளது. முதல் முறையாக 6G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் டிவைஸ்கள் மார்க்கெட்டில் எப்போது கிடைக்கும் என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் 6G டிவைஸ்கள் அறிமுகமாகும் என்பதற்கான நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 6G போன்கள் குவால்காம் நிறுவனம் 6G டிவைஸ்களை 2028-ஆம் ஆண்டிற்குள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனபடி பார்த்தால் இன்னும் இரண்டே ஆண்டுகளில் 6G அறிமுகம் ஆகும்.

இவை மார்க்கெட்-ரெடி ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், அநேகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 6G நெட்வொர்க்குகளை சோதனை செய்ய அவை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையான 6G நெட்வொர்க் அறிமுகத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகள் 2030-ஆம் ஆண்டில் 6G நெட்வொர்க்கை முழுமையாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இதன்பிறகே ஆப்பிள், ஒன் பிளஸ் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் வணிக ரீதியான 6G ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் கிடைக்க கூடும்.
இதற்கு முன்னர் 5G நெட்வொர்க் அறிமுகம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் 6G அறிமுகத்திற்கு இந்தியா பெரியளவில் தயாராகி வருகிறது. 5G-யுடன் ஒப்பிடும் போது, வரவிருக்கும் புதிய 6G நெட்வொர்க் 100 மடங்கு வேகமாகவும், டேட்டா ஸ்பீடு உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிநுட்ப துறையில் வளர்ந்து வரும் AI சுற்றுச்சூழல் அமைப்புக்கு இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 6G நெட்ஒர்க் உள்ள போன்களில் அதிகமாக காணப்படும் இணைய வேகம், 3D-பவர்ட் கேமிங் மற்றும் பிற பணிகளை மிகவும் பிரபலமாக்க கூடும்.
இதனால், நெட்வொர்க்கை பெரிதாக சிரமப்படுத்தாமல் பெரிய அளவிலான டேட்டாவை கையாளும் திறன் 6G-யின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியா 6G தொழில்நுட்பத்திற்கான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது.
அத்துடன், அதன் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பயன்பாட்டில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டுள்ளது. 5G-யுடன் ஒப்பிடும் போது, வரவிருக்கும் புதிய 6G நெட்வொர்க் 100 மடங்கு வேகமாகவும், டேட்டா ஸ்பீடு உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
When will 6G smartphones hit the market