அவசர காலங்களில் விமானிகள், மாலுமிகள் பயன்படுத்தும் Mayday call என்றால் என்ன..? - Seithipunal
Seithipunal


நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் , விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. AI171 என்ற போயிங் 78708 என்ற விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 01:39 மணிக்குப் புறப்பட்டது. புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குள், விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) MAYDAY அழைப்பு விடுத்தார், ஆனால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

சிறிது நேரத்திலேயே, விமானம் கட்டுப்பாட்டை இழந்து மேகனி நகரில் விழுந்து, கரும்புகை மற்றும் தீயுடன் வெடித்து சிதறியது. விமானம் தரையில் விழுவதற்கு முன்பு 625 அடி உயரத்தை எட்டியிருந்தது. இந்த விமானத்தில் பிரித்தானியா, இந்தியா, கனடா மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் உட்பட 242 பயணிகளுடன் சென்றது. இதில் AI-171 என்ற விமானத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவசர காலங்களில் விமானிகள் மற்றும் மாலுமிகள், Mayday call பயன்படுத்துவார்கள். இந்த Mayday call  என்றால் என்ன..? ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேடே அழைப்பு (Mayday call) என்பது விமானிகள் மற்றும் மாலுமிகளால் பயன்படுத்தப்படும் மிக உயர்ந்த அவசர எச்சரிக்கை நிலை. இந்த சொல் "மைடர்" என்ற பிரெஞ்சு சொற்றொடரிலிருந்து வந்தது, அதாவது "எனக்கு உதவுங்கள்". என்ற பொருளாகும்.

அவசர உதவியின் அவசியத்தை தெளிவுபடுத்த சமிக்ஞையானது மூன்று முறை மீண்டும், மீண்டும் செய்யப்படுகிறது. இது 1923-ஆம் ஆண்டு சர்வதேச வானொலி தகவல் தொடர்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 1927-ஆம் ஆண்டில் மோர்ஸ் குறியீட்டுடன் "SOS" உடன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதாவது ஒரு குறிப்பிட்ட விமானத்தில் இருந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மூன்று முறை மேடே அழைப்பு திரும்பத் திரும்ப வருகிறது என்றால் அந்த விமானம் அதி உச்ச ஆபத்தில் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

பின்னர் விமானி, விமானத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, என்ன தவறு நடக்கிறது, எந்த இடம், விமானத்தின் பெயர் போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் விரைவான நடவடிக்கைக்காக வழங்கும் நடவடிக்கையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the Mayday call used by pilots and sailors in emergencies


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->