இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் திடீரென மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் வகை தொற்றும் அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

டெல்லியில் நேற்று 17,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகளை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த உத்தரவு இனிவரும் வாரயிறுதியில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலைவரை ஊரடங்கு அமலில் இருக்கும். நகரத்தில் உள்ள அரசு அலுவலர்கள், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படவேண்டும். மீதமுள்ள பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். 

உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தடையின்றி தொடரும். மெட்ரோ மற்றும் நகர பேருந்துகள் 100 சதவீத இயக்கப்படும். ரயில்களில் பயணிகள் நிற்கக்கூடாது. பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கொரோனா வழிகாட்டு நெறி முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weekly 2 days full lockdown in delhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->