வாக்கு திருட்டு நடந்தது நிரூபணம் ஆகிவிட்டது- ராகுல்காந்தி பரபரப்பு குற்றசாட்டு!
Vote rigging has been proven Rahul Gandhi sensational accusation
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்த நிலையில், பிகாரில் "வாக்காளர் அதிகார யாத்திரை" என்ற பெயரில் பிரச்சார பயணத்தை தொடங்கிய ராகுல், தற்போது தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச ரேபரேலிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.
லக்னோ விமான நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் ரேபரேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிருபர்களிடம் பேசிய ராகுல்காந்தி,
“எங்களது முக்கிய கோஷம் ‘வாக்கு திருடரே, உங்கள் பதவியை விட்டு வெளியேறுங்கள்’ என்பதுதான். நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்தது நிரூபணமாகி வருகிறது. அதை ஜனநாயக வழிமுறையில் மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்” என்று தெரிவித்தார்.
English Summary
Vote rigging has been proven Rahul Gandhi sensational accusation