டெல்லி செங்கோட்டைக்கு நாளை முதல் மீண்டும் பார்வையாளர்கள் வர அனுமதி..!
Visitors will be allowed to visit the Red Fort in Delhi again from tomorrow
தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையை நாளை (16-ஆம் தேதி) முதல் பார்வையாளர்களுக்கு எப்போதும் போல் திறக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 10-ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலைப் படையினரின் கார் குண்டுவெடிப்பை அடுத்து தலைநகர் டில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும்,மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட டில்லி செங்கோட்டை வளாகம், மக்களின் பார்வைக்காக நாளை மீண்டும் திறக்கப்படுவதாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. எப்போதும் போல் பார்வையாளர்கள் வரலாம் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் 02 மற்றும் 3-வது நுழைவு வாயில்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டதாக டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நாளில், இந்த அறிவிப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Visitors will be allowed to visit the Red Fort in Delhi again from tomorrow