துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து: வெளியான அதிர்ச்சி காரணம்! அமைச்சர் நேரில் ஆய்வு!
Visakhapatnam harbour fire you tubers fight reason
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பலாகின.
இந்த தீ விபத்திற்கு காரணமாக இருக்கும் இளம் யூடியூபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பண விஷயம் தொடர்பாக சிலருடன் யூடியூபர் தகராறில் ஈடுபட்டதால் இவருக்கு சொந்தமான படகு ஒன்றில் அவர்கள் தீ வைத்திருக்கலாம் எனவும் தீ எரிந்து மற்ற படங்களுக்கு பரவி சுமார் 40க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படகில் வைக்கப்பட்டிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் காரணமாக தீ மேலும் வேகமாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்தத தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர், தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தெரிவித்திருப்பதாவது, 36 படகுகள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.
மேலும் 9 படகுகள் சேதமடைந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80% இழப்பீடாக வழங்கப்படும். இது முதலமைச்சரின் முடிவு.

இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை எந்த ஒரு அரசும் துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மாற்ற நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்தார்.
English Summary
Visakhapatnam harbour fire you tubers fight reason