கல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: நீதிகேட்டு நடந்த பாஜக பேரணியில் வன்முறை : 05 போலீஸ் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் பாஜக மூத்த தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், மாநில தலைமைச் செயலகத்தை நோக்கிய மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் பேரணிக்கு  கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. இருப்பினும், சட்டப்படி தடை உத்தரவுகளைப் பிறப்பித்து நிலைமையைக் கையாளும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, சத்ராகாஞ்சி மற்றும் ராணி ராஷ்மோனி சாலை ஆகிய இரண்டு இடங்களை போராட்டத்திற்கான இடங்களாக காவல்துறை அறிவித்தது. மேலும், போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் வகையில், நகரின் முக்கிய இடங்களில் இரும்புத் தடுப்புகளை சங்கிலிகளால் பிணைத்து வெல்டிங் பற்றவைத்தும், சரக்குப் மூட்டைகளை வைத்தும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

இந்நிலையில், நேற்று மதியம் 02 மணிக்கு ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கியது. அப்போது காவல்துறை அனுமதித்த இடத்தில் கூடாமல், அவர்கள் ஜவஹர்லால் நேரு சாலையில் பேரணியாகச் சென்றுள்ளனர்.  அங்கு குறைந்த அளவிலேயே தடுப்புகளும், அதிகாரிகளும் இருந்துள்ளனர். அப்போது, கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீற முயன்றுள்ளனர். 

அத்துடன், காவல்துறையினர் மீது செங்கற்களை வீசியும், கொடிக் கம்புகளால் தாக்கியும் வன்முறையில்போராட்ட காரர்கள்  ஈடுபட்ட்டுள்ளனர். இந்த மோதலில், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தயார் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். அதில், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை இவர் மீது 06 எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Violence at BJP rally demanding justice for the murder of a female doctor in Kolkata


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->