DGCA விதிகள் மீறல்… இன்று ஒரே நாளில் 400 இண்டிகோ விமானங்கள் ரத்து...! - Seithipunal
Seithipunal


விமான விபத்துக்களைத் தவிர்க்கும் புதிய முயற்சியில், டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் சிவில் விமான போக்குவரத்து துறை (DGCA) விமான நிறுவனங்களுக்கு புதிய விதிகளை வகுத்துள்ளது.

இவை படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்க அனுமதிக்கப்படுவதைக் குறைத்து 8 மணி நேரமாக மாற்றியுள்ளனர். மேலும், வாரத்திற்கு குறைந்தது 48 மணி நேர விடுமுறை வழங்க வேண்டும், விமானிகள் ஓய்வெடுக்கக் கூடும் என பல புதிய விதிகள் உத்தரவாக வந்துள்ளன.

இந்த விதிகளை மீறிய விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் தளர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனம் இண்டிகோ இதுவரை விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை.

குறைந்த விமானிகள் மற்றும் பணியாளர்களுடன் சேவை தொடர்வதால், கடந்த 1ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதிய விமானிகள் இல்லாமையால், பல விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 400 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.

பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், இண்டிகோ விமான சேவை மீண்டும் இயல்புநிலையில் வர ஒரு வாரம் காலம் தேவைப்படும் எனவும், ரத்து நிலை மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Violation of DGCA rules 400 IndiGo flights canceled single day today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->