காங்கிரஸ் எம்பியை முதுகில் தூக்கி சென்ற கிராமத்தினர்: சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவால் அதிர்ச்சி: நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் தொடர் மழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பீஹாரிலும் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதில் கதிஹர் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் சென்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகு மற்றும் டிராக்டர் மூலம் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், வெள்ளத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வரை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முதுகில் தூக்கிச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து மக்கள் பிரச்சினையை பார்வையிட சென்ற அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என காங்கிரஸ் சமாளித்துள்ளது.

ஷிவ்நகர் - சோனகல் பகுதிகளில் பார்வையிட சென்ற அன்வரை அங்கிருந்த ஒருவர்  முதுகில் தூக்கிச் சென்றுள்ளார். இது குறித்து கதிஹர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுனில் யாதவ் கூறுகையில், டிராக்டர், படகு மற்றும் பைக்கில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டோம். அப்போது நாங்கள் சென்ற வாகனம் சகதியில் மாட்டிக் கொண்டது. இன்னும் 2 கிமீ., தூரம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது திடீரென உடல்நலன் சரியில்லாமல் போனது. தலைச்சுற்றல் ஏற்படுவதாக கூறினார். உடனே அங்கிருந்தவர், தானாகவே விரும்பி அன்வரை அன்புடன் முதுகில் தூக்கிச் சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து பாஜவின் பூனவாலா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வெள்ள பாதிப்பிலும் காங்கிரசார் விவிஐபி வரவேற்பை எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளை கார்கே அவமானப்படுத்தினார். வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற தாரிக் அன்வர், நிவாரண பணிகளை இழிவுபடுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர் முதுகில் ஏறியவாறு சென்றார். 

காங்கிரஸ் விவிஐபி மனநிலையில் உள்ளதாகவும், மேலும் ராகுல் விடுப்பு மனநிலையில் உள்ளார் என்றும், ஆம் ஆத்மி தலைமறைவு மனநிலையில் உள்ளதாகவும், பிரதமர் மோடி மட்டுமே பணியாற்றும் மனநிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villagers carry Congress MP Tariq Anwar on their backs


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->