"ஒரு சிறிய தூரலுக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்தில் 'விகாஸ்' நிரம்புகிறது" காங்கிரஸ் விமர்சனம்!
Vikas overflows in Delhi Airport after a drizzle
டெல்லியில் இன்று அதிகாலை, திடீரென பலத்த காற்றும், இடியுடனான கனமழையும் பெய்தது. இதன் தாக்கமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 பகுதியில், மழைநீர் தேங்கி மேற்கூரை இடிந்து விழுந்தது.
சம்பவ வீடியோவில், கூரையின் ஒரு பகுதி மழைநீரால் பாதிக்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளது.
"ஒரு சிறிய தூரலுக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்தில் 'விகாஸ்' நிரம்புகிறது" என கேரளா காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது.
கடந்த ஜூன் மாதத்திலும் இதே பகுதியில் கூரை இடிந்து விழுந்த சம்பவம் நடந்தது. அப்போது ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த முறை சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய நிர்வாகம் பதிலளிக்கையில், “தீவிர வானிலை காரணமாக, வெளியே உள்ள இழுவிசை துணி கூடுதல் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் கிழிந்தது. இதன் விளைவாக தண்ணீர் உள்ளே புகுந்தது. மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை” என தெரிவித்தது.
முன்னதாக வானிலை ஆய்வுமையம், புழுதிப்புயல், இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 100 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசும் என எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.
English Summary
Vikas overflows in Delhi Airport after a drizzle