சிஎஸ்கே ரசிகர்கள் குஷி: சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமனம்..?
Will Suresh Raina be the next batting coach of Chennai from next season
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் 05 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை குஜராத் அணியுடன் மோதியது. இதில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
நடப்பு சீசனில் வழக்கத்திற்கு மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 04 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பிளே ஆப் கனவு பறிபோயுள்ளது. மேலும் சென்னை அணி ஆடிய 16 சீசன்களில் இந்த முறை மட்டுமே கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வருங்கால அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி முதல் படியாக அடுத்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னாவை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை இன்று சென்னை மற்றும் குஜராத் போட்டியின் போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஏறக்குறைய உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, வர்ணனையின்போது, அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க சென்னை அணி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரெய்னா தெரிவித்தார்.

அதற்கு, உடனே ரெய்னாவிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, மற்றுமொரு வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா 'புதிய பேட்டிங் பயிற்சியாளரின் முதலெழுத்துக்கள் 'எஸ்' (S)-ல் தொடங்குமா' என்று கேட்க, சுரேஷ் ரெய்னா 'அவர் வேகமான அரைசதம் அடித்துள்ளார்' என்று கூறி சிரித்தார்.
இதன் அடிப்படையில், ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சுரேஷ் ரெய்னா 02-வது இடத்தில் உள்ளார். அவருடைய பெயர் 'S ' இல் தொடங்கும். இதன் மூலம் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளது.
English Summary
Will Suresh Raina be the next batting coach of Chennai from next season