விஜயவாடாவில் பரபரப்பு...! ரகசிய வாட்ஸ்அப் குழு மூலம் ISIS தொடர்பு...! - 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

டெல்லி, ராஜஸ்தான், பீகார் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 42 பேர் இணைந்த ரகசிய வாட்ஸ்அப் குழுவின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

"அல் மாலிக் இஸ்லாமிக் யூத்" என்ற பெயரில் இயங்கி வந்த இந்த அமைப்பினர், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கத்தோடும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர்.

இளைஞர்களை மூளைச்சலவை செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆயுதப் பயிற்சி அளித்து, மீண்டும் இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் இதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த வலைப்பின்னலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்​பு (NIA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayawada ISIS contact through secret WhatsApp group 3 people arrested


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->