துணை ஜனாதிபதி தேர்தல் : சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி – எதிரணிக்கு பெரும்பான்மை சாத்தியம் இல்லை!
Vice Presidential Election CP Radhakrishnan is certain to win Opposition has no chance of majority
புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, தற்போதைய மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
மக்களவையில் : 542 எம்.பி.க்கள்,மேல்சபையில் : 228 எம்.பி.க்கள் (5 இடங்கள் காலியாக).நியமன எம்.பி.க்கள் : 12,மொத்தம் வாக்களிக்கத் தகுதியானவர்கள் – 782 எம்.பி.க்கள் இதில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
தற்போது மக்களவையும், மேல்சபையையும் சேர்த்து பா.ஜ.க. கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மேலும், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் உறுதியாக உள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குச்சீட்டு முறை கடைபிடிக்கப்பட உள்ளது.பிஜூ ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதிய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
மேலும் 23 எம்.பி.க்களின் (சிறு கட்சிகள் + சுயேட்சைகள்) வாக்குகள் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளன.இந்த வாக்குகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சென்றால், அவர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
English Summary
Vice Presidential Election CP Radhakrishnan is certain to win Opposition has no chance of majority