வன்ஸ்தாவில் 15 வயது சிறுமியை கடத்தி 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை...! - போலீசார் நடவடிக்கை
Vansa15 year old girl abducted and gang harassement by 8 people Police take action
குஜராத்தின் நவ்சாரி மாவட்டம், வன்ஸ்தா நகரில் 15 வயது சிறுமி மீது நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில், சிறுமி வீட்டிற்கு வெளியே சென்ற போது, மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தினர்.
கடத்தப்பட்ட சிறுமியை அருகிலுள்ள தடுப்பணைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், காரில் வந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து, சிறுமியை மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

சம்பவம் நடந்தவுடன், பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பி தாயிடம் சம்பவத்தை தெரிவித்தார்.சிறுமியின் தாய் புகார் அளித்ததால் வன்ஸ்தா போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போலீசார் விசாரணையில், மூன்று முதன்மை குற்றவாளிகள் சிறுமியை கடத்தினர் என்றும், தலையறைவு நிலையில் இருந்த மற்ற ஐந்து நண்பர்களும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.
இதன் பின்னர், குற்றவாளிகள் எல்லாம் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை வெளிப்படுத்தும் போது அதிகாரிகள், சமூகத்தில் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
English Summary
Vansa15 year old girl abducted and gang harassement by 8 people Police take action