நேற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்..!
Vande Bharat train runs at 100 kmph on Chenab railway bridge in Kashmir
நேற்று முதன் முதலாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான ரயில் பாலமாகும். பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 06-ஆம் தேதி செனாப் ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு - ஸ்ரிீநகர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு கருதி செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இந்த செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
English Summary
Vande Bharat train runs at 100 kmph on Chenab railway bridge in Kashmir