விபத்தால் அரங்கேறிய சோகம்.. பயத்தால் ஓட்டுநரின் பதைபதைப்பு செயல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மயூர் விஹார் பகுதியை சார்ந்தவர் ஜூமான். இவர் ரிக்சா ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் காஃபிர். இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென மாயமாகியுள்ளான். சிறுவனை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவன் காணவில்லை. 

இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், சிறுவன் காரில் பயணம் செய்ததாக காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

இதன்பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சோதனை செய்ததில், இதே பகுதியை சார்ந்த கார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சிறுவன் விபத்தில் இருந்ததும், அவனது உடலை கால்வாயில் வீசிவிட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது.

சம்பவத்தன்று கார் ஓட்டுநராக மதன்லால் தனது காரை இயக்கியுள்ளார். இவர் ரிவர்ஸ் இயக்கும் போது சிறுவனின் மீது கார் எதிர்பாராத விதமாக ஏறவே, சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். இதனையடுத்து சிறுவனின் உடலை அங்குள்ள கால்வாயில் கொண்டு சென்று வீசியுள்ளார். மேலும், சிறுவன் காவல்துறை விசாரணைக்கு பயந்து இந்த செயலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Noida accidental murder police arrest culprit


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal