ரூ.1,000 கோடியில் ராமர்கோவிலுக்கு சாலை வசதி - உ.பி. அரசு ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமபிரானுக்கு மிக பிரமாண்டமான கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024-ம் ஆண்டு முதல் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கோவில் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அயோத்தியில் இருந்து ராமர் கோவிலுக்கு சாலை வசதி செய்யப்படுகிறது.

இந்த சாலை வசதிக்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. 

இந்த திட்டம் குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது, 'இந்த திட்டத்தின் மூலம், ராமர் கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்' என்றுதெரிவித்துள்ளார்.

இதில் மிக முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராமர் கோவில் வரை உள்ள 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலைக்கு "ஜென்மபூமி" பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பிற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh govt approvel for thousand crores road facility to ramar temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->