அடங்க மறுக்கும் சீனா, பாக்கிஸ்தான் மீது போர்... தேதியை குறித்த பிரதமர்?.. பாஜக தலைவர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டுடன் போர் புரிவதற்கான தேதியினை, பிரதமர் மோடி தேர்வு செய்து இருப்பதாக உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஸ்வந்திர தேவ் சிங் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஸ்வந்திர தேவ் சிங் இருக்கிறார். 

இந்நிலையில், இவரின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்தது போல, ராமர்கோவில் கட்டும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. 

இதனைப்போன்று நமக்கு தொல்லை கொடுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டுடன் போர் புரியும் தேதியும் பிரதமர் மோடியால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீடியோவில் கூறியுள்ளார். இந்த பேச்சு உத்திரபிரதேச மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh BJP Party leader Speech about War with China and Pakistan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->