இரு காலும் இல்லை, ஒரு கை இல்லை, ஆனால் தன்னம்பிக்கையால் வென்ற இளைஞன்!
U{SC exam Suraj Tiwari
உத்தரப்பிரதேசம் : ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதிய இளைஞர் சுராஜ் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.
என் மகன் மிக தைரியசாலி, என்னை பெருமைப்பட வைத்துள்ளான் என்கிறார் சுராஜ் திவாரியின் தந்தை ரமேஷ் குமார்.
என் மகன் கடின உழைப்பாளி, எப்போதும் துவண்டுபோனதில்லை என்கிறார் சுராஜ் திவாரியின் தாய் ஆஷா தேவி.
இதேபோல், டெல்லி காவலர் ஒருவர் தனது மனைவியின் துணையுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் ராம் பஜன் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஏற்கனவே ராம் பஜன் ஏழு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இருந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் சளைக்காமல் தேர்வுகளுக்கு முயற்சித்துக் கொண்டே இருந்துள்ளார்.

தற்போது அவர் எட்டாவது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 667 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்று இருக்கிறார்.