ஆமதாபாத் விமான விபத்து அறிக்கை : போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்சுகள் பிரச்சினை: ஏர் இந்தியா நிறுவனம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா தகவல்..!
US found fuel switch issue on Boeing planes in 2018
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. 15 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஏஐபி புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால், இந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையை இந்திய விமானிகள் சங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பத்தன்மை இல்லை என நிராகரித்துள்ளது.
-w9h2r.png)
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கல் உள்ளதாக அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்தது. ஆனால், அது குறித்து ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏஏஐபி வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 2018-ஆம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்சில் சிக்கல் இருந்துள்ளது என அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்துள்ளது என்ற தகவல் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
-trphy.png)
டிசம்பர் 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது என்றும், இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. ஆனால், அது குறித்து ஆய்வு செய்ய ஏர் இந்தியா விமானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, இந்த சுவிட்சுகள் விமானத்தின் இஞ்சின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றன. தரையில் உள்ள இஞ்ஜின்களை இயக்க அல்லது நிறுத்த விமானிகள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். வானில் இஞ்ஜின் செயலிழந்தால் இஞ்ஜின்களை இயக்க அல்லது மறுதொடக்கம் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
English Summary
US found fuel switch issue on Boeing planes in 2018