அமெரிக்காவின் 50% வரி அதிர்ச்சி – பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு
US 50 tariff shock cotton import duty exemption extended
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் அனுப்பப்படும் ஆயத்த ஆடைகள் இந்த வரியால் மிகுந்த பாதிப்பைச் சந்திக்க உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான விலக்கு காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, டிசம்பர் 31-ந்தேதி வரை செல்லுபடியாகும் வகையில் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்:கடந்த செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டது.தற்போது ஏற்றுமதியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த விலக்கு காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வழக்கமாக 11% இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், வரி விலக்கின் மூலம்:
துணி, ஆடை, அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகள் குறையும்.உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பது அதிகரிக்கும்.பருத்தி விலைகள் நிலைத்தன்மை பெறும்.பணவீக்க அழுத்தம் குறையும்.சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்படையும்.இந்திய ஜவுளிப் பொருட்கள் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளும்.
அமெரிக்காவின் வரி அதிர்ச்சியால் பாதிக்கப்படும் ஜவுளித் துறைக்கு மத்திய அரசின் இந்த விலக்கு தற்காலிக நிவாரணமாக அமைந்துள்ளது.
English Summary
US 50 tariff shock cotton import duty exemption extended