கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.!!
cm mk stalin visit marxist formar leader nallakannu
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு, கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் திடீரென தவறி விழுந்ததில், அவர் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, நல்லகண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு நலம் பெற விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
cm mk stalin visit marxist formar leader nallakannu